டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நடிகை அமலா பாலை விஜய், விக்ரம் ஜோடியாக நடிக்க வைத்து உயரத்துக்கு கொண்டு சென்றவர் இயக்குனர் ஏ.எல்.விஜய். அதுவே காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
சுதந்திரமாக வாழ்ந்து பழகிய அமலாபாலால் கட்டுக்கோப்பான குடும்பத்திற்குள் வாழ முடியவில்லை. இதன் காரணமாக இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு அமலாபால் பிசியாக நடிக்கத் தொடங்கி விட்டார்.
தற்போது அமலாபால் ஒரு வெப்சீரிஸில் கணவன் ஜெகபதி பாபுவால் துன்புறுத்தப்படும மனைவியாக நடித்திருக்கிறார். இந்த வெப் சீரிஸின் புரமோசனுக்காக அவர் அளித்த பேட்டில் தனது மணவாழ்க்கை, விவாகரத்து குறித்து பேசி இருக்கிறார்.
அது வருமாறு: நான் விவகாரத்து பெற்று பிரிய முடிவு செய்தபோது என்னை யாரும் ஆதரிக்கவில்லை. அனைவரும் என்னை பயமுத்தவே முயற்சித்தனர். வெற்றிகரமான நடிகையாக இருந்த போதிலும் அந்த சமயத்தில் பயத்துடனேயே வாழ்ந்தேன். எனது சந்தோஷம் மற்றும் மனநிலை பற்றி யாரும் கவலைப்படவில்லை என கூறியிருக்கிறார்.




