கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் |

தமிழ்நாட்டில் அரசியல், சினிமா, டிவி என செயல்பட்டுக் கொண்டிருப்பவர் கமல்ஹாசன். ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். அடுத்த வாரம் முதல் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக இன்று அறிவித்துவிட்டார்.
எனவே, தேர்தல் முடியும் வரை அவர் சினிமா படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை. ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் முடிந்தாலும் கோடைக்கு முன்பாகவே கொளுத்தும் வெயிலில் சுற்றுப் பயணம் மேற்கொண்டதால் களைத்துப் போய் ஓய்வெடுப்பார். அதனால், தேர்தல் முடிந்து ஏப்ரல் மாதமும் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார் என்றே தெரிகிறது. அடுத்து மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிவிடும்.
அதற்குப் பிறகு மட்டுமே அவரால் 'இந்தியன் 2, விக்ரம்' படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள முடியும். 'இந்தியன் 2' படப்பிடிப்பு கடந்த ஒரு வருட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, அதன் இயக்குனர் ஷங்கர் தெலுங்குப் படத்திற்கான முன் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட ஆரம்பித்துவிட்டாராம்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுதான் இரண்டு படங்களில் எந்தப் படத்திற்கு கமல்ஹாசன் முன்னுரிமை கொடுப்பார் என்பது தெரிய வரும்.