அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
கவுதம் மேனன் - சிம்பு பட டைட்டில் வெளியானது
கவுதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களில் நடித்தார் சிம்பு. அதையடுத்து லாக்டவுன் காலட்டத்தில் கார்த்தி - ஜெஸ்ஸி ஆகிய இருவரும் போனில் பேசிக்கொள்ளும் உரையாடலை, கார்த்தி டயல் செய்த எண் என்ற பெயரில் குறும்படமாக எடுத்த கவுதம் அதை சோசியல் மீடியாவில் வெளியிட்டார். அதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில் மீண்டும் சிம்புவை வைத்து கவுதம் மேனன் புதிய படத்தை இயக்கும் செய்தி சிம்புவின் பிறந்த நாளான பிப்ரவரி 3-ல் வெளியானது. இந்த நிலையில் கவுதம் மேனனின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று அப்படத்திற்கு நதிகளிலே நீராடும் சூரியன் என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காக்க காக்க படத்தில் இடம் பெற்ற ஒன்றா இரண்டா ஆசைகள் என்ற பாடல் வரிகளில் இருந்து இந்த தலைப்பை எடுத்துள்ளார் கவுதம் மேனன். ஐசரிகணேஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.