காஷ்மீர் தாக்குதல்: உயிர் தப்பிய பாலிவுட் நடிகை | சொட்டைத் தலையர்களின் கதை 'சொட்ட சொட்ட நனையுது' | பெரிய பட்ஜெட்டில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்': சந்தானம் தகவல் | நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் | பிளாஷ்பேக்: என்.எஸ்.கே இடத்தை பிடித்த காமெடி நடிகர் | கமல் உடன் இணைந்து நடிக்க ஆசை! - நடிகர் பிரியதர்ஷி | ‛அயோத்தி' படத்தினால் நடந்த நன்மை! - சசிகுமார் ஓபன் டாக் | இயக்குனர் இளன் அடுத்த படத்தின் அப்டேட்! | இன்று வரை ஓடிடி.,க்கு தராத சிலம்பரசன் படம் |
நடிகர் சிலம்பரசன் தமிழ் சினிமா உலகத்தில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவரது பல படங்களை ஓடிடி நிறுவனங்கள் நல்ல விலைக்கு வாங்கியுள்ளன. ஆனால் ஒரு திரைப்படம் மட்டும் இன்று வரை எந்த ஒரு ஓடிடி தளத்திலும் வெளியாகவில்லை. பாண்டிராஜ் இயக்கத்தில் சிலம்பரசன், நயன்தாரா, சூரி நடித்த திரைப்படம் தான் ‛இது நம்ம ஆளு'. இந்த திரைப்படம் 2016ம் ஆண்டு வெளியாகியது. ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்தை இன்று வரை எந்த ஒரு ஓடிடி தளத்திலும் விற்கவில்லை.
காரணத்தை ஆராய்ந்தபோது இந்த திரைப்படத்தை சிலம்பரசனின் தந்தை டி ராஜேந்தர் தயாரித்திருந்தார். டி ராஜேந்தர் தயாரித்த எந்த ஒரு திரைப்படமும் இதுவரை எந்த ஓடிடி தளத்திற்கும் விற்க முன்வரவில்லை என்றே கூறப்படுகிறது. சிலம்பரசனுக்கு சமூக வலைதளங்களில் அதிக பார்வையாளர்கள் இருந்தும் கூட இந்த படத்தை விற்காதது ரசிகர்கள் இடையே பெரிய ஏமாற்றதையே தருகிறது.