ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழ் சினிமாவில் உள்ள இளம் நடிகர்களுள் ஒருவர் விஷ்ணு விஷால். முதல் மனைவி ரஜினியை விவாகரத்து செய்தவர். விஷ்ணுவும் பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவும் காதலித்து வருகிறார்கள். இருவரும் தங்களது திருமணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறார்கள்.
அடிக்கடி சமூக வலைத்தளங்களில் தங்களது ஜோடியான புகைப்படங்களைப் பகிர்வது அவர்களது வழக்கம். தற்போது மாலத்தீவிற்கு இருவரும் ஜோடியாகவே சுற்றுலா சென்றுள்ளார்கள்.
இரு தினங்களுக்கு முன்பு தனியாக இருக்கும் போட்டோக்களைப் பதிவிட்ட விஷ்ணு விஷால், “விடுமுறை நாளின் முதல் புகைப்படம்..மாலத்தீவு, விவி கேங், பணம் கொடுத்து விடுமுறை, விடுமுறை நாள் புரமோஷன் அல்ல” எனப் பதிவிட்டிருந்தார்.
கடந்த ஒரு வருட காலமாகவே பல நடிகைகள் மாலத் தீவிற்கு சுற்றுலா சென்ற புகைப்படங்களைத் தொடர்ந்து பதிவிட்டார்கள். அவையெல்லாம் பணம் கொடுத்து செய்யப்பட்ட பிரமோஷன் என்பதை மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார் விஷ்ணு விஷால்.
நேற்று காதலி ஜுவாலாவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “மழையில் நடனம், இந்த கணத்தைக் கொண்டாடு, வலியை புறம்தள்ளு,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதல் புகைப்படத்தில் 'விவிகேங்' என அவர் குறிப்பிட்டிருப்பது காதலியையும் சேர்த்துத்தான் போலிருக்கிறது.