டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் அவருடைய 65வது படத்தை நெல்சன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.
தமிழில் “ஈரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நண்பன், எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம்', தெலுங்கில் 'ஏ மாய சேசவே, ரேஸ் குர்ரம், கிக் 2, ப்ரூஸ் லீ' கன்னடத்தில் 'ஜாக்குவார்', மலையாளத்தில் 'கலெக்டர், வில்லன்' ஆகிய படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்தவர்.
தற்போது தமிழில் 'துருவ நட்சத்திரம், துக்ளக் தர்பார்' ஆகிய படங்களுக்கும், தெலுங்கில் 'ராதே ஷ்யாம்' படத்திற்கும் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
'நண்பன்' படத்திற்குப் பிறகு விஜய் படத்துக்கு மீண்டும் ஒளிப்பதிவு செய்யப் போவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் மனோஜ்.
“மாநிலத்தில் அனைவராலும் நேசிக்கப்படும், விரைவில் இந்தியா முழுவதும் நேசிக்கப்பட உள்ள அற்புதமான மனிதருடன் மீண்டும் மற்றொரு பயணத்தை ஆரம்பிக்கப் போவது மகிழ்ச்சி. 'நண்பன்' படத்திற்குப் பிறகு மீண்டும் இணைகிறேன். அந்த நினைவுகளை நினைத்துப் பார்க்கிறேன். 'தளபதி 65' ஒரு பான் இந்தியா படமாக இருக்கப் போகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.