டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

ராஜ் ஸ்ரீ வென்ச்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ராஜேஷ்குமார், ஸ்ரீவித்யா ராஜேஷ் ஆகியோர் தயாரிக்க, சுரேஷ் குமார் இயக்கி இருக்கும் படம் மழையில் நனைகிறேன். அன்சன் பால், பிகில் படத்தில் நடித்த ரெபா மோனிகா ஜான், சங்கர் குரு ராஜா ஆகியோர் நடித்துள்ளார்கள். விஷ்ணு பிரசாத் இசை அமைப்பாளராக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார். கல்யாண் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் சுரேஷ் குமார் கூறியதாவது: எஞ்சினியரிங் படித்த ஒரு பிராமணப் பெண்ணுக்கும், படித்து விட்டு வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டு இருக்கும், ஒரு கிறித்தவ இளைஞனுக்கும், ஏற்படும் காதலும் அதன் விளைவுகளுமே, இந்தப் படம்.
காதலில் ஒரு பிரச்னை வரும்போது ஒன்று காதலர்கள் காயப்பட வேண்டி இருக்கிறது . அல்லது காதலர்களின் பெற்றோர்கள் காயப்பட வேண்டி இருக்கிறது. அது பற்றியும் இந்தப் படம் பேசுகிறது .படத்தில் நாயகி அறிமுக காட்சியும், இறுதிக் காட்சியும் மழையில் நடக்கும் . அதனால்தான் படத்துக்கு இந்தப் பெயர் பொருத்தமாக இருக்குமென வைத்தோம்.
தற்போது படம் உலக திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. அடுத்த மாதம் திரையரங்கில் வெளியாகும் அனைத்து ரசிகர்களும் ரசிப்பார்கள். எல்லோருக்கும் இந்தப் படம் பிடிக்கும். என்றார் .




