ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பிரபல தொழில் நிறுவன குழுமத்தின் தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜுவின் மகள் சந்தியா ராஜூ பரதம் பயின்றவர். உலகம் முழுவதும் பரத நாட்டியம் ஆடியவர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகும் படத்தின் பெயர் தான் " நாட்டியம் ".
புகழ்மிக்க சிறந்த நடனக்கலைஞரான சந்தியா ராஜூ இயக்குநர் ரேவந்த் கொருகொண்டா இயக்கியுள்ள “நாட்டியம்” என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். நாட்டியத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் ஷ்ரவண் பரத்வாஜ் இசை அமைத்துள்ளார்.
பிரபல திரைப்பட விநியோகஸ்தரான தில்ராஜூ ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் தெலுங்கு மொழி திரைப்படத்தை விநியோகம் செய்கிறார். அண்மையில் இந்த திரைப்படத்தின் போஸ்டரை 'அப்போலோ' மருத்துவமனைக் குழுமத்தைச் சேர்ந்த உபாசனா கமினேனி கொண்டிலா அறிமுகம் செய்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் டீசரை தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்.டி.ஆர். யூ டியூபில் வெளியிட்டுள்ளார்.
தொழில் துறையில் சிறந்து விளங்கும் தொழிலதிபர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜுவின் மகள் முறையாக நடனம் கற்று சிறந்த நடனக்கலைஞராக விளங்கும் நிலையில் அவர் திரைத்துறையிலும் முத்திரை பதிப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.