ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தெலுங்கில் வைஷ்ணவ் தேவ், கிருதி ஷெட்டி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த பிப்ரவரி12-ம் தேதி வெளியான படம் உப்பெனா. விஜய்யின் மாஸ்டர் படத்தை அடுத்து இந்தபடத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதியின் நடிப்புக்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்தது. இந்த படத்தில் நாயகி கிருதி ஷெட்டியின் தந்தை வேடத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி.
இந்நிலையில், உப்பெனா ஹிட் காரணமாக மேலும் ஒரு மெகா தெலுங்கு படத்தில் கமிட்டாகி நடித்து வரும் கிருதி ஷெட்டி, அடுத்தபடியாக தமிழ், தெலுங்கில் லிங்குசாமி இயக்கும் புதிய படத்தில் ராமிற்கு ஜோடியாக நடிக்கவும் கமிட்டாகியிருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.




