அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
மலையாளத்தில் வெளியாகும் நல்ல நல்ல படங்கள் பலவற்றை தமிழ் ரசிகர்களும் பார்த்து ரசிக்கட்டும் என பல இயக்குனர்கள் அவற்றை ரீமேக் செய்ய விரும்புகின்றனர். ஆனால் அந்த முயற்சியில் ஏதோ ஒரு படத்துக்குத்தான் வெற்றி கிடைக்கிறது. அதுவும் கூட பாபநாசம் போல கமர்ஷியல் படமாக இருந்தால் மட்டுமே. இந்தநிலையில் தான் கதாநாயகியை மையப்படுத்திய மலையாள 'ஹெலன்' தமிழில் 'அன்பிற்கினியாள்' படமாக தயாராகி வருகிறது. அருன்பாண்டியனும் அவர் மகள் கீர்த்தி பாண்டியனும் தந்தை-மகளாகவே இந்தப்படத்தில் நடிக்கின்றனர்.
இந்தப்படம் கூட ஒரு அப்பா, மகள் சென்டிமென்ட் மற்றும் த்ரில்லர் வகையை சேர்ந்தது என்பதால் ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போடும் வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'தி கிரேட் இண்டியன் கிச்சன்' படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்து இயக்க இருக்கிறார் இயக்குனர் ஆர்.கண்ணன். வீட்டு ஆண்களுக்கு சமைத்து போடுவதையே முழுநேர வேலையாக செய்து வரும், இல்லத்தரசிகளின் கஷ்டத்தை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது.
இந்தப்படத்தில் ஒரு வீட்டில் அன்றாடம் சமையலறை, சாப்பாட்டு அறை ஆகியவற்றை சுற்றியே நடக்கும் கதைக்களம் என்பதால், படத்தில் பாதிக்கு மேற்பட்ட காட்சிகள், ஒரே இடத்தில் நகர்வதாகவும், திரும்பத்திரும்ப சாப்பிடுவது பற்றியும் தான் அமைந்திருக்கும். அதுதான் அந்த கதையின் அடிநாதம் என்றாலும், தமிழில் ஒரே மாதிரி நிகழ்வை அடுத்த காட்சியில் கூட பார்க்க விரும்பாத ரசிகர்களை ஆர்.கண்ணன் திருப்திப்படுத்துவது என்பது அவருக்கு ஒரு சவாலான விஷயமாகவே இருக்கும். இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றபடி இந்த கதையை சிறப்பாக கொடுக்கும் முயற்சியில் கண்ணன் இறங்கி உள்ளார்.