ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தமிழில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் படத்தில் நடித்துள்ள ஸ்ருதிஹாசன், தெலுங்கில் மீண்டும் பிசியான ஹீரோயினாகிவிட்டார். ரவிதேஜாவுடன் அவர் நடித்த கிராக் படம் வெளியாகி வெற்றிபெற்றதை அடுத்து, பவன் கல்யாணுடன் நடித்துள்ள வக்கீல் சாப் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். இதற்கிடையே ஓடிடி தளத்திற்காக அவர் நடித்துள்ள பிட்டா கதலு என்ற படம் பிப்ரவரி19ம் தேதியான நாளை வெளியாகிறது. அடுத்து பிரபாஸ் உடன் சலார் படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.
இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் அளித்துள்ள ஒரு பேட்டியில், ரவிதேஜா, மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன் ஆகியோரை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது ரவிதேஜாவிற்கு என் இதயத்தில் சிறப்பு இடம் உண்டு. அவர் என்னிடத்தில் மிகவும் கனிவாக நடந்து கொண்டார். அதேபோல், மகேஷ்பாபு ஒரு அழகான ஹீரோ. அவருடன் இணைந்து பணியாற்றியது சிறப்பான நேரங்கள். அல்லு அர்ஜூன் நான் இதுவரை கண்டிராத கடின உழைப்பாளி. நேர்மையானவர். தனது ஒவ்வொரு படங்களுக்கும் தான் செய்ய வேண்டியதை விட அவர் அதிகமான உழைப்பை கொடுக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.




