துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தமிழ் சினிமாவில் வேறு மொழிகளில் தயாராகி இங்கு தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும் படங்களில் அதிக விலைக்கு விற்கப்பட்ட படம் 'பாகுபலி 2'.
இப்படத்தை தமிழிலும் சேர்தே படமாக்கியதாகச் சொல்வார்கள். முதல் பாகத்திலாவது சில காட்சிகளில் உதட்டசைவிற்கும், வசனத்திற்கும் பொருத்தம் இருந்தது. ஆனால், இரண்டாவது பாகத்தில் பொருத்தம் இல்லாமல் தான் இருந்தது. 'பாகுபலி' இரண்டு பாகப் படங்களையும் தெலுங்கில் மட்டுமே முழுமையாகப் படமாக்கினார்கள்.
இந்நிலையில் ராஜமௌலி தற்போது இயக்கி வரும் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் தமிழ்நாட்டு உரிமையை லைக்கா நிறுவனம் வாங்கியுள்ளது. அதன் விலை சுமார் 42 கோடி என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'பாகுபலி 2' படத்தின் உரிமை 47 கோடியாம். அதைவிட ஐந்து கோடி குறைவு.
'பாகுபலி' படத்திலாவது தமிழ் ரசிகர்கள் தங்களைத் தொடர்புபடுத்திக் கொள்ள அது ஒரு பொதுவான சரித்திரப் படமாக இருந்தது. ஆனால், 'ஆர்ஆர்ஆர்' படம் சுதந்திரத்திற்காகப் போராடிய தெலுங்கு சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய படம். அது எப்படி தமிழ் ரசிகர்களை படத்துடன் தொடர்புப்படுத்தி பார்க்க வைக்கும் என இங்கு கோலிவுட்டில் கேள்வி எழுப்புகிறார்கள். 42 கோடியே அதிகம்தான் என்கிறார்கள் அனுபவசாலிகள்.