தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ் ஹீரோக்களுக்கு எப்படி தெலுங்கிலும் நுழைய வேண்டுமென்ற ஆசை இருக்கிறதோ, அது போலவே தெலுங்கு நடிகர்களுக்கும் தமிழுக்கு வர வேண்டுமென்ற ஆசை இருக்கிறது.
பிரபாஸ், மகேஷ் பாபு, ராம் சரண் ஆகியோரைத் தொடர்ந்து ராம் பொத்தினேனி அடுத்து தமிழுக்கு வர இருக்கிறார். தமிழ் இயக்குனரான லிங்குசாமி தமிழ், தெலுங்கில் இயக்க உள்ள புதிய படத்தில் ராம் கதாநாயகனாக நடிக்கப் போகிறார்.
கடந்த சில தினங்களாகவே இது பற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. இன்று அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுவிட்டார்கள்.
லிங்குசாமி கடைசியாக இயக்கிய 'சண்டக்கோழி 2' படம் தோல்விப் படமாகத்தான் அமைந்தது. லிங்குசாமி இயக்கிய 'ரன், சண்டக்கோழி', உள்ளிட்ட சில படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு அங்கு வரவேற்பைப் பெற்றது. அதனால், அவரும் அங்கு நன்கு அறிமுகமானவர்தான்.
முதன் முதலாக தெலுங்கு நடிகருடன் நேரடி தெலுங்குப் படத்தில் இணைய உள்ளார் லிங்குசாமி. சில வருடங்களுக்கு முன்பு அவரும், அல்லு அர்ஜுனும் இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்ட ஒரு படம் அறிவிப்புடன் நின்று போனது.