விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் |
ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கங்கனா ரணாவத், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் 'தலைவி' படத்தில் நடித்து வருகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.
இன்று திடீரென இப்படத்தின் சில புகைப்படங்களையும், கங்கனா நடித்து வரும் ஹிந்திப் படமான 'தாக்கட்' படத்தின் புகைப்படங்களையும் பகிர்ந்து ஒரு சவால் விடுத்துள்ளார். டுவிட்டரில் அந்த சவாலை அவர் பகிர்ந்துள்ளார்.
“இது உருமாற்றத்திற்கான எச்சரிக்கை... இந்த உலகத்தில் இப்போதைக்கு என்னைத் தவிர வேறு யாரும் இந்த அளவிற்கு மாற்றத்தைக் காண்பித்ததில்லை. மெரில் ஸ்ட்ரிப் போல அடுக்கடுக்கான கதாபாத்திரத் திறமை என்னிடம் உள்ளது. அதே போல கேல் கடாட் போல் என்னாலும் ஆக்ஷனாகவும், கிளாமராகவும் நடிக்க முடியும். இந்தப் பிரபஞ்சத்தில் என்னைத் தவிர வேறு யாராவது இந்த அளவிற்கு கலைத் திறமை காட்ட முடியுமா என வெளிப்படையாக சவால் விடுக்கிறேன். அப்போது என்னுடைய ஆணவத்தை நான் கைவிடுகிறேன். அதுவரை அந்தப் பெருமையின் மதிப்பு எனக்குத்தான்,” என சவால் விடுத்துள்ளார் கங்கனா.