ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது கார்த்தி ஜோடியாக சுல்தான் படம் மூலம் தமிழிலும் கால் பதித்துள்ள இவர், அடுத்ததாக விஜய் படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்தநிலையில் முதன்முறையாக டாப் டக்கர் இசை ஆல்பம் ஒன்றுக்காக கலர் புல்லாக நடனம் ஆடியிருக்கிறார் ராஷ்மிகா. இந்தப்பாடலின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த வீடியோ ஆல்பத்தில் அவரும் ஒரு நடிகராக இடம் பிடித்துள்ளார். பாடலை பாட்ஷா என்பவர் எழுதியுள்ளதுடன் யுவன், உச்சனா அமித் ஜோனிதா காந்தி ஆகியோருடன் இணைந்து பாடியும் உள்ளார்.
இந்தப்பாடல் பற்றி ராஷ்மிகா கூறும்போது, “முதன்முறையாக இப்படி ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளேன்.. திருமண நிகழ்ச்சி, பள்ளி விழாக்கள் மற்றும் பார்ட்டிகளில் இந்த பாடல் பிரதான இடம் பிடிக்கும் என உறுதியாக சொல்வேன்” என்கிறார்.