இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
தமிழ் சினிமாவில் இளம் இயக்குனரான கார்த்திக் சுப்பராஜ் ஏற்கெனவே ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தை இயக்கினார். அந்தப் படத்திற்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' படத்தை இயக்கி முடித்துள்ளார். அப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
அடுத்து விக்ரம், அவரது மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார். இந்தப் படத்தை இயக்கி முடித்த பிறகு மீண்டும் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ஒன்றை இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசியலை விட்டு விலக முடிவெடுத்த பின் தொடர்ந்து படங்களில் நடிக்க ரஜினிகாந்த் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். 'அண்ணாத்த' படத்திற்குப் பிறகு அவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிக்கலாம் என்கிறார்கள்.
ஏற்கெனவே, கேஎஸ் ரவிக்குமாரிடமும் மீண்டும் 'ராணா' படத்தின் கதையைக் கேட்டுள்ளார். அவரும் அக்கதையை மீண்டும் அவருக்கு சொல்லி உள்ளார். நின்று போன 'ராணா' படம் கூட மீண்டும் எடுக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
'அண்ணாத்த' படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில்தான் ரஜினிகாந்த் அடுத்து நடிக்க உள்ள படம் எது என்ற அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.