பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
நாவலூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய கார் அங்காடியை நடிகர் விஜய் சேதுபதி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நிருபர் ஒருவர், துக்ளக் தர்பார் படத்தில் அரசியல் நெடி அதிகமாக இருக்கிறதே என கேள்வி கேட்டார். அதற்கு அவர், “இனிமேல் கதையை சொல்லிவிட்டு தான் படம் எடுக்க வேண்டும் போல் தெரிகிறது. படம் வந்தால் தானே அது எப்படிப்பட்ட படம் என தெரியும். பிரச்சனை செய்வதற்காக நாங்கள் படம் எடுக்கவில்லை. மக்களை மகிழ்விக்க தான் படம் எடுக்கிறோம். எந்த சர்ச்சைகளும் எங்களுக்கு தேவையில்லாத வேலை. பிரச்னை செய்யவும் நேரம் இல்லை" என்று கூறியுள்ளார்