அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
நடிகர் சூர்யா தயாரிக்கும் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் அருண் விஜய் மகன் ஆர்ணவ். இப்படத்தில் ஆர்ணவின் தந்தையாக நடிக்க இருப்பது அருண் விஜய் தான். குழந்தைகளை மையமாக கொண்ட இந்தப் படத்தில் ஒரு தந்தையின் கேரக்டர் முக்கியமானதாகும். இதில் நடிக்க சில நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. அது முடிவடையாத நிலையில் அருண் விஜய்யே நடிப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இயக்குநர் சரவ் சண்முகம் கூறியதாவது: இந்த கதாப்பாத்திரத்தில் அருண் விஜய் நடிப்பாரா எனும் பெரும் சந்தேகத்துடன் தான் முதலில் அவரை அணுகினேன். அவர் இந்தப்படத்தில் விளம்பரத்திற்காகவும், ஆர்ணவ் விஜய்க்காக மட்டுமென்றால் நான் நடிக்க மாட்டேன் என முதலிலேயே கூறிவிட்டார்.
நான் திரைக்கதையை கூறிய பிறகு அந்த கதாப்பாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஒப்பந்தமாவதற்கு முன்னால் தனது கதாப்பாத்திரம் குறித்து நிறைய கேட்டு தெரிந்து கொண்டார். தற்போது ஊட்டியில் எங்களுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். .
ஆர்ணவ் விஜய் மிகவும் துறுதுறுப்பான, உற்சாகம் கொண்ட திறன்மிகு நடிகர். இயல்பாகவே அவரிடம் நடிப்பு திறன் நிறைந்திருக்கிறது. இப்படம் மிக அழகாக உருவாகி வருகிறது.குழந்தைகளின் உலகை மையமாக வைத்து உருவாகும், இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் அருண் விஜயின்32 வது படமாகும். இப்படம் முழுக்க ஊட்டியில் படமாக்கப்படுகிறது. என்றார்.