புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழில் முரட்டுக்காளை உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகை சுமலதா. மறைந்த கன்னட நடிகரும் எம்.பியுமான அம்பரீஷன் மனைவியான இவர் கணவரின் மறைவை தொடர்ந்து தானும் அரசியலில் குதித்து தற்போது எம்.பியாகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்தநிலையில் இவரது மகன் அபிஷேக் அம்பரீஷ் கதாநாயகனாக நடித்து வரும் 'பேட் மேனர்ஸ்' என்கிற படத்தின் படப்பிடிப்பிற்காக தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கர்நாடகாவில் மாண்டியாவில் உள்ள அரசாங்கத்தால் மூடப்பட்ட, செயல்படாத சர்க்கரை ஆலை ஒன்றை திறந்து, இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதற்கான அனுமதியை தனது எம்.பி என்கிற அரசியல் அதிகாரத்தின் மூலமாக சுமலதா பெற்று தந்துள்ளார் என அந்த பகுதியை சேர்ந்த விவசாய அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இதில் துளியும் உண்மையில்லை என மறுத்துள்ளார் சுமலதா
“எனது மகன் நடித்து வரும் படக்குழுவினரே சம்பந்தப்பட்ட அரசு துறையில் முறையான அனுமதியை பெற்றுத்தான் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். இதில் என் பெயரை இழுப்பது அரசியல் ஆதாயத்திற்காகத்தான். இப்படி குற்றச்சாட்டை கூறியுள்ளவர்களுக்கு ஒரு விஷயத்தை மட்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன், இதுபோன்ற படப்பிடிப்புகள் மூலம் உள்ளூர் வருமானம் அதிகரிக்கவும், உள்ளூர் சுற்றுலா வளரவும் தான் செய்யும் என்பதையும் அவர்கள் உணர வேண்டும்” என விளக்கம் கூறியுள்ளார் சுமலதா எம்பி.