திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
ஹீரோ படத்தை தொடர்ந்து டாக்டர், அயலான் படங்களில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இதில் அயலான் படத்தை ரவிக்குமார் இயக்குகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல்பிரீத் சிங் நடித்துள்ளார்.
ரகுல்பிரீத் சிங் ஒரு டுவீட் வெளியிட்டுள்ளார். அதில் அயலான் படப்பிடிப்பில் என் பகுதி இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே மீதம் உள்ளது. சிவகார்த்திகேயன், டைரக்டர் ரவிக்குமாருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி என்று தெரிவித்திருக்கிறார்.
அவரது டுவீட்டிற்கு பதிலளிக்கும் வகையில் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள பதிவில், ''உங்களுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. என்னை எப்போதும் ஆங்கிலத்தில் பேச வைத்ததற்கு நன்றி. நான் உங்களுடன் பேசியது பிரிட்டீஷ் இங்கிலீஷ் என கருதுகிறேன்'' என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.