ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
மும்பையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து கொடி கட்டிப் பறந்தவர்களில் குஷ்பு குறிப்பிடத்தக்கவர். நம்பர்ஒன் நடிகையாக இருந்த குஷ்புவிற்கு கோயில் கட்டிய வழிபாடு நடத்திய வரலாற்று அதிசயங்கள் கூட தமிழ்நாட்டில் அரங்கேறியது. டைரக்டர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்டு தமிழ்நாட்டு மருமகளாகி விட்ட குஷ்பு, சமீபகாலமாக முழுநேர அரசில்வாதியாகி விட்டார். ஆனபோதிலும் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தனது மகள்களான அவந்திகா, அனந்திதா ஆகியோரின் புகைப்படங்களை அவ்வப்போது தனது டுவிட்டரில் வெளியிட்டு வருகிறார் குஷ்பு. தற்போது தனது இளைய மகள் அனந்திதாவின் புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ள குஷ்பு, எனது சிறிய தேவதை அனந்திதா சுந்தரின் சிரிப்பு தொடர்ந்து என்னை ஊக்கமளித்துக் கொண்டிருக்கிறது. உத்வேகம் மற்றும் வழிகாட்டும் சக்தியாக இருக்கிறாள். என் பொம்முக்குட்டி அம்மாவை நான் நேசிக்கிறேன். ஐ லவ் யூ என்றும் பதிவிட்டுள்ளார். அந்த டுவிட்டில் நிறைய அன்பு, இதயம், முத்தங்கள், உதடுகள் மற்றும் அரவணைப்பு ஈமோஜிகளை சேர்த்துள்ளார் குஷ்பு.
இந்த டுவீட் சோசியல் மீடியாவில் நிறைய பாராட்டுக்களை பெற்று வருகிறது. அதோடு அடுத்த கதாநாயகி ரெடியாகிவிட்டார் என சிலர் பதிவிட்டுள்ளனர்.