ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா | வார் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மாரி செல்வராஜின் 'பைசன்' பிஸினஸ் எப்படி? | இறுதிக்கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படம் | இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து |
ஈஸ்வரன் படத்தை அடுத்து மாநாடு, பத்து தல ஆகிய படங்களில் நடிக்கும் சிம்பு, இந்த படங்களைத் தொடர்ந்து சூர்யா நடித்த சூரரைப்போற்று படத்தை இயக்கிய சுதா இயக்கும் படத்தில் நடிப்பதாக ஒரு செய்தி வெளியாகி யுள்ளது.
சூரரைப்போற்று படத்தை அடுத்து அஜீத்தை வைத்து சுதா கொங்கரா ஒரு படம் இயக்க தயாராகி வருவதாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்த எந்த உறுதியான தகவல்களும் வெளியாகவில்லை. இந்நிலையில், தற்போது சிம்புவிற்கு ஒரு கதை சொல்லி அந்த படத்தைதான் அடுத்தபடியாக சுதா இயக்கப் போவதாக கோலிவுட்டில் செய்தி வெளியாகி யுள்ளது.
மாநாடு, பத்துதல படங்களின் படப்பிடிப்பு முடிந்த பிறகு இந்த படத்தை சுதா தொடங்குகிறாரா? இல்லை உடனடியாக தொடங்குகிறாரா? என்கிற தகவல்கள் விரைவில் வெளி யாகும் என்று தெரிகிறது.