மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமல்லாது வில்லனாகவும் அசத்தி வருகிறார். இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரையுலகினர், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிறந்தநாள் கேக்கை பட்டாக்கத்தி கொண்டு விஜய் சேதுபதி கட் பண்ணும் ஒரு போட்டோ சோசியல் மீடியாவில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக ரவுடிகள் தான் இதுபோன்று பட்டாக்கத்தி கொண்டு பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடுவார்கள். அவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்த சம்பவங்களும் நிகழ்ந்தன. ஆனால் ஒரு பிரபல நடிகரான விஜய் சேதுபதியும் இதுபோன்று செய்வதைப்பார்த்து நாளை அவர்களது ரசிகர்களும் இதே செயலை செய்வார்கள். அதற்கு இவர்களே முன்னுதாரணமாக இருக்கலாமா?, இவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை பாயுமா? என்று நெட்டிசன்கள் விஜய் சேதுபதியின் இந்த செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி. இது குறித்து அவர் கூறுகையில், ''எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. 3 நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அதில் பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் வெட்டியிருப்பேன். அடுத்து பொன்ராமின் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன். அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். ஆகையால், அந்தப் படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும்போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கினை வெட்டினேன். இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது. இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்'' என்றார்.