பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
டெல்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷிகண்ணா மற்றும் பலர் நடிக்கும் படம் 'துக்ளக் தர்பார்'. இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
அதில் அரசியல்வாதியாக நடிக்கும் பார்த்திபனின் பெயர் ராசிமான் என இடம் பெற்றுள்ளது. மேலும், அந்தப் பெயருடன் உள்ள கட்சி போஸ்டர்களை சிலர் கிழிப்பது போலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
ராசிமான் என்ற பெயர் நாம் தமிழர் கட்சித் தலைவைரான சீமானைக் குறிப்பதாக உள்ளதென அக்காட்சியின் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதனால் எழுந்த சர்ச்சையை அடுத்து ராசிமான் கதாபாத்திரத்தில் நடிக்கும் பார்த்திபன், சீமானிடம் நேரில் விளக்கமளித்துள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
“நண்பர் சீமான் அவர்களிடம் நேரிடையாக'துக்ளக் தர்பார்'குறித்து விளக்கமளித்து விட்டேன்.அவரும் பெருந்தன்மையாக பதில் அளித்தார் ராசிமான் என்ற பெயர் சீண்ட வேண்டு மென்று வைக்கப்பட்டதல்ல. இருந்திருந்தால் அதற்கு நானே இடந்தந்திருக்க மாட்டேன்.இந்நிமிடம் வரை நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல.
(புதிய பாதை நமது) இருப்பினும் இடையராது உழைத்து தங்களின் லட்சிய இலக்கை அடைய போராடும்'நாம் தமிழர்' தோழர்களின் முயற்சிகளை கிண்டல் செய்ய நான் இடம் தரமாட்டேன்.எனவே உள்நோக்கமின்றி நடந்த பெயர் பிரச்சனையை இயக்குனரிடம் கூறி, ராசிமான் என்ற பெயரை மாற்ற முயற்சி செய்து வருகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.