கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் |

சிம்பு நடித்து உள்ள ஈஸ்வரன் படத்தில் டெரர் வில்லனாக நடித்திருக்கிறார் சண்டை இயக்குனர் ஸ்டன்ட் சிவா. படத்தில் நடித்திருப்பது குறித்து அவர் கூறியதாவது: 1989ம் ஆண்டு லவ் டுடே விஜய் படத்தில் தான் சண்டைப்பயிற்சி இயக்குநராக அறிமுகமானேன். தொடர்ந்து ஒன்ஸ்மோர், காதலுக்கு மரியாதை படங்களில் பணிபுரிந்தேன். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் 30 வருடங்கள் பணிபுரிந்திருக்கிறேன்.
நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. அவ்வப்போது சின்ன சின்ன கேரக்டர்களில் தலைகாட்டினேன். முழு நடிகரா சுசீந்திரன் சாம்பியன் படத்தில் என்னை வில்லனாக நடிக்க வைத்தார். இப்போது ஈஸ்வரனிலும் நடிக்க வைத்துள்ளார். சிம்புவுக்கு எதிராக நிற்க வேண்டும். பெரிய படம், சிறிது பதற்றம் இருந்தது. ஷுட்டிங்கின் போது எல்லாம் மறந்து விட்டது.
சிம்பு ஒரு அற்புதமான நடிகர். தொட்டி ஜெயா படத்தில் அவருடன் வேலை செய்திருக்கிறேன். அதே மாதிரியே சின்னப்பையனாக இந்தப்படத்தில் வந்து நின்றார். ஆக்சன் காட்சிகள் எல்லாம் நடிக்கும் போது மாஸ்டரை பார்த்து கொள்ளுங்கள் என்பார். என் மீது நிறைய அக்கறையுடன் இருந்தார். ஹீரோவை ஆக்சன் காட்சிகளில் அடிபடாமல் பார்த்து கொண்டிருப்பது தான் எங்கள் வேலையாக இருந்தது. அதே போல் அவர் என்னை பார்த்து கொண்டபோது அந்த உணர்வே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
நடிப்பு , ஸ்டண்ட் இனிமேல் இரண்டிலுமே சேர்த்து தான் பயணிக்க போகிறேன். ஸ்டண்ட் இயக்குநராக இருந்த போது திரை உலகில் நிறைய அங்கீகாரம் கிடைத்தது இப்போது ரசிகர்களிடம் இருந்து பாராட்டு கிடைத்து வருகிறது. இரண்டையும் பிரித்து தொடர்ந்து வேலை செய்வேன். இரண்டிலுமே என் பயணம் தொடரும். ரசிகர்களின் ஆதரவும் பாராட்டும் கிடைக்கும் என்று நம்புகிறேன். என்கிறார் சிவா.




