'மஞ்சுமல் பாய்ஸ்' பட லாபம் மறைப்பு : நடிகர் சவுபின் சாஹிர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு | மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் | பிளாஷ்பேக் : தமிழகத்தில் பிறந்து இசையால் இந்தியாவை ஆண்ட வாணி ஜெயராம் | 'அமரன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் | ரஜினியின் பிறந்தநாளில் 'டபுள்' அப்டேட்? | மாரி தொடரிலிருந்து வெளியேறுகிறாரா ஹீரோயின் ஆஷிகா படுகோன் | சைலண்டாக நிச்சயதார்த்தத்தை முடித்த தனுஷிக் | சீதாவின் தங்கையா இந்த வில்லி நடிகை |
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்துவிட்டார். ஆனால் ரசிகர்கள், விடாது அவர் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைதியாக போராட்டம் நடத்தினர்.
அரசியலுக்கு வருகிறேன், மக்களை ஏமாற்றமாட்டேன், தமிழக மக்களுக்காக என் உயிர் போனாலும் பரவாயில்லை என கூறிய நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். ஆனால் அண்ணாத்த படப்பிடிப்பில் அவருக்கு ஏற்பட்ட ரத்த அழுத்த மாறுபாடு பிரச்னையால் தன் முடிவை பின் வாங்கிவிட்டார். உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரவில்லை, என்னை மன்னித்து விடுங்கள் என அறிவித்தார். இந்த முடிவை ரஜினி ரசிகர்கள் ஒரு பிரிவினர் ஏற்றுக் கொண்டாலும் மற்றொரு பிரிவினர் ஏற்கவில்லை.
அவர் அரசியலுக்கு வர வலியுறுத்தி அறவழி போராட்டத்தில் இன்று(ஜன., 10) ஈடுபட போவதாக அறிவித்தனர். இதற்கு ரஜினி மக்கள் மன்றம் எதிர்ப்பு தெரிவித்தது. இருந்தாலும் தங்கள் முடிவில் பின்வாங்காத ரசிகர்கள் பலர் இன்று சென்னை வள்ளூவர் கோட்டத்தில் அமைதி வழியில் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பலரும் அரசியலுக்கு வா தலைவா, அரசியலுக்கு வாங்க ரஜினி என்ற வாசகம் அடங்கிய பதாதைகளை ஏந்தி போராட்டம் செய்தனர். பல ஊர்களில் வந்துள்ள ரசிகர்கள் அவரை அரசியலுக்கு வரச் சொல்லி கோஷங்களை எழுப்பினர்.
இந்த விஷயம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. டுவிட்டரில் #அரசியலுக்கு_வாங்க_ரஜினி என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. அதன் உடன் #அரசியலுக்கு_வாங்க_தலைவா, #வள்ளுவர்கோட்டம்_அழைக்கிறது ஆகிய ஹேஷ்டாக்குகளும் டிரண்ட் ஆகின.