சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால் நடித்துள்ள ஈஸ்வரன் படம் ஜன., 14ல் வெளியாகிறது. பக்கா கிராமத்து கதையுடன், குடும்ப சென்டிமென்ட் கலந்து உருவாகி உள்ள இப்படத்தின் டிரைலரை இன்று(ஜன., 8) வெளியிட்டனர். சிம்புவின் வழக்கமான பன்ச் வசனங்களுடன் டிரைலர் ரசிகர்களை ஈர்த்துள்ளது. அதில் டிரைலரின் கடைசியில், நீ அழிப்பதற்கு வந்த அசுரன் என்றால் நான் காப்பதற்கு வந்த ஈஸ்வரன் என்று சிம்பு பேசுகிறார்.
இது தனுஷை சீண்டுவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்தாண்டு தனுஷ் நடிப்பில் அசுரன் படம் வெளியானது. தனுஷ் - சிம்பு இடையே நட்பு என்று சொல்லப்பட்டாலும் அவர்களின் படங்களின் வசனங்களில் ஒருவரை ஒருவர் தாக்கி பேசும் வசனங்கள் ஆரம்பகாலங்களில் அதிகமாகவே இருந்தது. இடையில் சில காலம் அப்படி இல்லாமல் இருந்தது. இப்போது மீண்டும் துவங்கிவிட்டதா பலரும் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
டிரைலரை காண https://www.youtube.com/watch?v=LDfuP0YeIQk என்ற இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்