என்டிஆர் - நீல் படப்பிடிப்பு ஆரம்பம்: 'சலார், கேஜிஎப் 3' நடக்குமா? | 'வின்னர், கிரி' - காமெடியை மீண்டும் தருமா 'கேங்கர்ஸ்' கூட்டணி | இளையராஜா பாடலால் 'குட் பேட் அக்லி' ஹிட்டானதா?: கங்கை அமரன் பேச்சுக்கு மகன் பிரேம்ஜி சொன்னது என்ன? | உண்மை கதையில் யோகி பாபு | வெற்றி ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பும் ஷ்ரத்தா | 'மாமன்' சூரியின் கதை: இயக்குனர் தகவல் | பிளாஷ்பேக்: பல தலைமுறைகளை வாழ வைத்த 'மைடியர் குட்டிச்சாத்தான்' | பிளாஷ்பேக்: காதல் சின்னத்தை மீட்டெடுக்க விரும்பிய வி.என்.ஜானகி | மே 1 : சினிமா ரசிகர்களுக்காக பல வெளியீடுகள் |
தமிழ்நாட்டில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. அதற்கு திரையுலகினர் பலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
ஒரு சில திரையுலகினரும் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கை அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிர் கருத்துக்களை முன் வைத்துள்ளார்கள். நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் டாக்டர் ஒருவரின் முகப்புத்தகப் பதிவை டுவிட்டரில் பகிர்ந்து அவருடைய சொந்த கருத்துக்களையும் பதிவிட்டுள்ளார்.
“டாக்டர்களுக்கு திரையுலகம் என்ன நியாயத்தைக் கொடுக்கப் போகிறது ?, பணத்திற்காக வாழ்க்கையை வர்த்தகமாக்குவது ?, பொது போக்குவரத்து இயங்குகிறது ? ஆனால், மக்கள் கவலைப்படுவதில்லை என்பது தர்க்கமான ஒரு வாதம். தமிழ்நாடு நன்றாகவே இருந்து வருகிறது. ஆனால், தியேட்டர்களில் 50 சதவீத அனுமதி மட்டும் வழங்கலாமே, மக்களின் உடல்நலம் மிகவும் முக்கியமானது.
திரையுலகம் வாழ வேண்டும் என்று கருதினால் பெரிய ஹீரோக்கள் அவர்களது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளட்டும். தயாரிப்பாளர்களுக்கு சுமையாக இருப்பதை நிறுத்துங்கள். அந்த வகையில் தொழிலை நடத்த முடியும். தினசரி ஊதியம் பெறுபவர்களுக்கும் வாழ்வாதாரத்தைக் கொடுக்க முடியும். 50 சதவீத அனுமதியிலேயே தேவையான வருவாயைப் பெற இயலும்.
தியேட்டர் உரிமையாளர்கள் கடினமான ஒரு நேரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள், ஏற்றுக் கொள்கிறேன். அதே போல வேறு பல தொழில்களும் உள்ளன. மக்களின் உடல்நலத்திற்கு எந்த ஊறும் இல்லாமல் வேறு மாற்று முறைகளை அவர்கள் உருவாக்க வேண்டும். ஒரு தகவல் அது அனுப்பும் முறையைப் பொறுத்தே இருக்கிறது, அது எல்லாம் இயல்பாக இருப்பது போலவே சொல்கிறார்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.