புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழ் சினிமா உலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக அறியப்படுபவர் செல்வராகவன். ஒரு சில தோல்விப் படங்களைக் கொடுத்திருந்தாலும் அவர் மீதான ரசிகர்களின் நம்பிக்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
செல்வராகவன், தனுஷ், யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி 2006ல் வெளிவந்த புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது. இதற்கான அறிவிப்பு இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியானது.
எஸ்.தாணு தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், யுவன் இசையமைப்பில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது.
அது பற்றி டுவிட்டரில் செல்வராகவன், “எனது உலகத்திற்கு மீண்டும் திரும்பிவிட்டேன், எஸ் 12, செல்வராகவன் திரைப்படம்” எனப் பதிவிட்டுள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் 12வது படம் இது, அதனால்தான் எஸ் 12. இப்படத்தின் மற்ற அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.