பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், கடந்த மாதம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சியை பதிவு செய்ய விண்ணப்பித்தார். இந்த தகவல் வெளியானதும் அப்பா தொடங்கும் கட்சிக்கும் எனக்கும் எந்த சம்பந்ததும் இல்லை. எனது படத்தை, இயக்கத்தின் பெயரை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று அறிக்கை வெளியிட்டார். இதை தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகர் தனது கட்சி பதிவை வாபஸ் பெற்றார்.
இந்த நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது வேறு ஒரு பெயரில் புதிய கட்சி ஒன்றை தொடங்கும் முயற்சியில் இருக்கிறார். இதற்காக விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள், மற்றும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் அனைத்திந்திய எஸ்.ஏ.சந்திரசேகர் மக்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. கட்சிக்கு 20 மாவட்ட பொறுப்பாளர்களையும் நியமித்துள்ளதாக தெரிகிறது.
தனது கட்சிக்கு விஜய் ஆதரவு இருப்பதாகவும், கிறிஸ்துமஸ் தினத்தன்று தானும் விஜய்யும் இணைந்து விட்டதாகவும், விஜய் தனக்கு மோதிரம் அணிவித்து புதிய அரசியல் பயணத்துக்கு வாழ்த்தியதாகவும் எஸ்.ஏ.சந்திரசேகர் அந்த கூட்டத்தில் பேசி இருக்கிறார். இதனால் அப்பா - மகன் மீண்டும் இணைந்துவிட்டதால் குடும்பத்தினரும், ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடும் அதிருப்தியில் விஜய்
இதுப்பற்றி விசாரித்ததில் எஸ்.ஏ.சந்திரசேகர் தனிக் கட்சி தொடங்க ஆலோசனை நடத்தியது உண்மை தான். ஆனால் விஜய்யை சந்தித்ததாக சந்திரசேகர் கூறியது உண்மையில்லையாம். காரணம் அன்றைய தினம் விஜய் ஊரிலேயே இல்லை என தெரிவிக்கிறார்கள். அரசியல் கட்சி துவங்கும் விவகாரத்தால் தந்தை மீது கடந்த சில மாதங்கள் முதல் இப்போது வரை அதிருப்தி மனநிலையில் தான் விஜய் உள்ளாராம். தன்னை வளர்த்து இந்தளவுக்கு வளர்த்துவிட்ட தந்தை இனி அமைதியாக ஓய்வெடுக்கவே விஜய் விரும்புகிறாராம். அதைவிடுத்து கட்சி ஆரம்பிக்கிறேன் என்ற பெயரில் அவர் மட்டுமல்லாது தன்னையும் சிக்கலில் சிக்க வைத்து விடுவாரோ என்கிற பயமும் விஜய்யிடம் உள்ளது. கட்சி ஆரம்பிப்பதில் பெரும் முனைப்புடன் செயல்படும் சந்திரசேகர், ஜனவரி 16 அன்று, விமர்சையாக கூட்டத்தை நடத்தவும் ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.