ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக இருந்து நடிகையாக உயர்ந்தவர் விஜே சித்து. டிவி சீரியல்கள், குறும்படங்கள் மட்டுமின்றி கால்ஸ் என்ற படத்திலும் அவர் நடித்துள்ளார். அந்தப் படம் இந்த மாதம் ரிலீஸாகவிருக்கிறது.
இந்நிலையில் கடந்த மாதம் 9ம் தேதி தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சித்து. அவரது மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற சந்தேகம் தொடர்ந்து அவரது ரசிகர்கள் மத்தியில் நீடித்து வருகிறது. அதோடு அவரைப் பற்றியும், கைது செய்யப்பட்டுள்ள அவரது கணவர் ஹேமந்த் பற்றியும் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சித்துவின் மரணம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் சூழ்நிலையில், தற்கொலை செய்து கொண்டபோது சித்துவின் ஹேண்ட் பேக்கில் இருந்து போலீசார் கஞ்சா மற்றும் கஞ்சா அடைக்கப்பட்ட சிகரெட்டை மீட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சித்துவுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு என ஏற்கனவே அவரது மாமனார், அதாவது ஹேமந்த்தின் அப்பா குற்றம் சாட்டி இருந்த நிலையில், போதைப் பொருள் விவகாரமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையைத் தொடர்ந்து போதைப் பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதே போல் சித்துவின் வழக்கு விசாரணையும் வேறு கோணத்திற்கு மாறுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.




