2025 வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... | மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? |

விங்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பால் சதீஷ், ஜூலி தயாரிக்கும் படம், 'செவல காள'. டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் ஹீரோவாக நடிக்கிறார். கடைசியாக 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தில் ஹீரோவாக நடித்தார். அவருடன் ஆரியன், சம்பத் ராம், மீனாட்சி ஜெய்ஸ்வால் நடிக்கின்றனர். ஆர்.ராஜாமணி ஒளிப்பதிவு செய்ய, பிரித்வி இசை அமைக்கிறார்.
பால் சதீஷ் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறுகையில், "தவறு என்று தெரிந்தால், அதை யார் செய்தாலும் அவர்களை தண்டிக்க தயங்காதவர் ஹீரோ. மதுரை அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கும் அவரது அண்ணனை பணக்காரர் ஒருவர் அவமானப் படுத்துகிறார். அதை ஹீரோ எதிர்க்கும்போது, வெளியூரில் இருந்து வந்த ஹீரோயினை சந்திக்கிறார். பிறகு ஹீரோ வாழ்க்கையில் நடக்கும் சில மாற்றங்களை மையப்படுத்தி இப்படத்தை இயக்கி வருகிறேன்" என்றார்.