அசுரனாக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா | சக்தித் திருமகன், காந்தி கண்ணாடி வெற்றியா | மாதம்பட்டி ரங்கராஜ் மீது பாலியல் புகார்: ஜாய் கிரிசில்டாவிடம் 6 மணிநேரம் விசாரணை | காதலன் காதலியாக மாற... : காதலி காதலனாக மாற... | 'காந்தாரா சாப்டர் -1' படத்தில் ரிஷப் ஷெட்டிக்கு தமிழில் டப்பிங் கொடுத்த நடிகர் மணிகண்டன்! | சூர்யா 46வது படத்தில் அம்மா வேடத்தில் ராதிகா சரத்குமார்! | ஒரு டிக்கெட்டை 1 லட்சத்து 30 ஆயிரம் கொடுத்து வாங்கிய பவன் கல்யாண் ரசிகர் | பிளாஷ்பேக்: இரு பெரும் ஜாம்பவான்கள் இணைந்து கொடுத்த தோல்விப் படம் | பிளாஷ்பேக்: ஜெமினி கணேசன் 2 வேடங்களில் நடித்த படம் | மிரட்டும் ‛காந்தாரா சாப்டர் 1' டிரைலர் |
‛ஹரிஹர வீரமல்லு' படத்தை அடுத்து பவன் கல்யாண் நடித்துள்ள படம் ‛ஓஜி'. சுஜித் இயக்கி உள்ள இந்த படத்தில் பவன் கல்யாணுடன் எம்ரான் அஸ்வின், பிரியங்கா மோகன், அர்ஜுன்தாஸ், பிரகாஷ்ராஜ் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். தமன் இசை அமைத்துள்ள இந்த படம் வருகிற செப்டம்பர் 25ம் தேதி திரைக்கு வருகிறது. 250 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் தற்போது அமெரிக்கா பிரீமியரில் இந்த படம் 2 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது. இதுவரை எந்த ஒரு இந்திய படமும் அமெரிக்காவில் இந்த அளவுக்கு வசூலித்ததில்லை என்கிறார்கள்.