பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
மலையாள திரையுலகில் கடந்த சில வருடங்களில் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராகவும் சமீப நாட்களில் கதையின் நாயகனாகவும் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருபவர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ். இவர் கதையின் நாயகனாக நடித்த ஜோசப் மற்றும் தானே இயக்கி நடித்த பணி என இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இன்னொரு பக்கம் தமிழில் கடந்த சில மாதங்களில் வெளியான ரெட்ரோ மற்றும் தக் லைப் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது பிரபல மலையாள கமர்சியல் இயக்குனர் ஷாஜி கைலாஷ் டைரக்சனில் உருவாகி வரும் 'வரவு' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் ஜோஜூ ஜார்ஜ். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மூணாறு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டு லொகேஷனில் இருந்து தங்குமிடத்திற்கு திரும்பிய போது அவரும் படக்குழுவினர் மூன்று பேரும் பயணித்த ஜீப் ஒன்று திடீரென எதிர்பாராத விதமாக விபத்துக்கு உள்ளானது. சிறிய காயங்களுடன் ஜோஜூ ஜார்ஜ் மற்றும் உடன் வந்தவர்கள் உயிர் தப்பினாலும் மூணாறில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டனர். படப்பிடிப்பும் திங்கள் முதல் வழக்கம்போல தடையின்றி தொடர்ந்து நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.