டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழ் சினிமாவில் ஒரே நாளில் ஒரே ஹீரோவின் இரண்டு படங்கள் வெளியாகக் கூடாது என்ற நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, டியுட்' ஆகிய படங்கள் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளதாக இரண்டு படத் தயாரிப்பாளர்களும் அறிவித்துள்ளார்கள்.
'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படம் அக்டோபர் 17ம் தேதி வெளியாகும் என்று நேற்று அறிவித்தார்கள். 'டியூட்' படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். தெலுங்கு சினிமாவில் ஸ்டிரைக் நடந்ததால் 'டியூட்' பட வேலைகள் முடியவில்லை. எனவே, அப்படம் தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் சற்று முன்னர் அப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று மீண்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இன்று மாலை அப்டேட் வெளியிட உள்ளதாகவும் அறிவித்தனர். அதன்படி படத்தின் முதல்பாடலை வரும் ஆக., 28ல் வெளியிடுவதாக குறிப்பிட்டுள்ளனர். ஊரும் பிளட் என்ற பெயரில் முதல் பாடல் வெளியாகிறது. இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையைமக்கிறார்.
தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் இரண்டு படங்களான 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, டியூட்' ஆகியவை ஏட்டிக்குப் போட்டியாக வெளியாக உள்ளன.




