15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் |
பொதுவாக ஸ்டார் ஹீரோக்களின் வாரிசுகள் ஹீரோக்களாக அறிமுகமாகும்போது இது வழக்கம்தானே என பெரிய அதிர்வுகள் ஏற்படாது. அதே சமயம் அவர்கள் இயக்குனர்களாக மாறும்போது ஆச்சரியமாக அனைவரது கவனமும் அந்த பக்கம் திரும்பும். அப்படி நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது தாத்தாவை போல இயக்குனர் பாதையில் அடிஎடுத்து வைத்து படம் இயக்கி வருகிறார். ஆனால் இதுநாள் வரை அவரது தந்தையான விஜய் தனது மகன் பற்றியோ அவர் டைரக்ஷனில் நுழைந்தது பற்றியோ ஒரு வார்த்தை கூட வெளிப்படையாக பேசியதில்லை. இருவரும் இணைந்து எடுத்த ஒரு போட்டோ வெளியாகி கூட பல வருடங்கள் ஆகிவிட்டது.
அதே சமயம் பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கானின் மகனும் தந்தையை போல நடிக்க வேண்டும் என்று ஆசைப்படாமல் டைரக்ஷன் பக்கம் பார்வையை திருப்பி உள்ளார். அந்த வகையில் தற்போது 'தி பே***ட்ஸ் ஆப் பாலிவுட்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். ஷாருக்கானும் வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் தனது மகன் பற்றியும் அவரது டைரக்சன் பற்றியும் பெருமையாக வெளியே பேசி வருகிறார்.
ஆர்யன் கான் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது போல தான் தகவல் வெளியாகி வருகிறது. சமீபத்தில் எக்ஸ் பக்கத்தில் நடிகர் ஷாருக்கான் ரசிகர்களுடன் உரையாடும்போது ஆர்யன் கான் இயக்கி வரும் படம் குறித்தும் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஷாருக்கான், “படம் சூப்பராக இருக்கிறது. நீங்கள் பார்த்துவிட்டு தீர்மானியுங்கள். ஆனால் பொழுதுபோக்காகவும் உணர்ச்சி பூர்வமாகவும் உருவாகி இருக்கிறது. இது என்னுடைய நேர்மையான விமர்சனம்” என்று கூறியுள்ளார்.