மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? | போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் | இணையதள தேடல் : தீபிகா படுகோன் | உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி |
சென்னை அடுத்த வண்டலுார் - கேளம்பாக்கம் சாலையில் இயங்கி வரும் வி.ஐ.டி., பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் நடிகரும், ராஜ்யசபா எம்பியுமான கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் பேசியதாவது...
நாடு சுதந்திரம் பெற்ற பின், அனைத்து விஷயங்களிலும் நாம் வெற்றி அடைந்து விட்டோமா? நாட்டில், ஜாதி, மத வேறுபாடுகளை களைவதில் நாம் தோல்வி அடைந்துள்ளோம். நானும், என் தொழிலில் தோல்வி அடைந்திருக்கிறேன். அதை ஒப்புக்கொள்வதில் தயக்கம் இல்லை. ஆனால், ஒவ்வொரு தோல்வியிலும், புதிய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.
உங்களின் முன்பு பேசுவது எனக்கு உத்வேகம் அளிக்கிறது. நான் கலையுலகத்தில் இன்றும் படித்துக் கொண்டும் கற்றுக் கொண்டும் இருக்கிறேன். சோதனைகளை சாதனைகளாக மாற்ற பழகிக் கொள்ளுங்கள். வி.ஐ.டி., பல்கலையில் பயின்ற மாணவர்கள், உலகின் பல நாடுகளில் பணியாற்றி, இந்தியாவுக்கும், இந்த கல்வி நிலையத்திற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர். அவர்கள், தோல்விகளை இறக்கி வைத்து, வெற்றியை சுமந்தவர்களாக உள்ளனர். வெளிநாட்டிற்கு செல்லுங்கள், அங்கு கற்றுக் கொள்ளுங்கள், அங்கு சம்பாதித்து திரும்பி உங்கள் தாய்நாட்டுக்கு சேவை செய்யுங்கள்.
திமிரோ, வீரமோ, வணக்கத்திற்கு உரியது அல்ல; நம் தாய்மொழி தான் வணக்கத்திற்கு உரியது. வீரத்தின் உச்சமே, அஹிம்சை. நாத்திகம் என்ற வார்த்தையை, ஆத்திகம் தான் தந்தது. நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன். பகுத்தறிவு என்பது, அறிவு சார்ந்தது.
இவ்வாறு பேசிய கமல் பேசினார்.