விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் |
மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்திருக்கிறார் அர்ஷா பைஜூ. 'பதினெட்டாம் படி' படத்தில் அறிமுகமான அவர் 'முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 'ஹவுஸ் மேட்ஸ்' படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகமானார். படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் மகிழ்ச்சியில் இருக்கிறார் அர்ஷா.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: மலையாள சினிமாவில் பல படங்களில் நாயகியாக நடித்தாலும், தமிழ் சினிமாவில் நாயகியாக நடிக்க வேண்டும் என்பதற்காக காத்துக் கொண்டிருந்தேன். எனது ஆசை தற்போது 'ஹவுஸ் மேட்ஸ்' படம் மூலம் நிறைவேறி இருக்கிறது.
தமிழ்நாட்டு மக்கள் திறமைக்கு மதிப்பளிக்கிறார்கள். 'ஹவுஸ் மேட்ஸ்' படத்திற்கு கிடைத்த வரவேற்பு உற்சாகத்தை தந்தது. நிச்சயம் தமிழ் சினிமாவில் எனக்கான இடத்தை பிடிப்பேன், என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. மலையாள சினிமா, தமிழ் சினிமா இரண்டுக்கும் பெரிய வித்தியாசமோ, வேறுபாடோ இல்லை. தமிழ் சினிமாவில் திறமைகள் அங்கீகரிக்கப்படுகிறது. தமிழ் சினிமா மீது எனக்கு மிகப்பெரிய காதல் உண்டு. நான் நடனக் கலைஞர், மற்றும் கர்நாடக இசைக் கலைஞர் என்பதால், நடனம் மற்றும் இசையை மையமாக கொண்ட கதைக்களத்தில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை'' என்கிறார்.