இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்தவர். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' படத்தில் ஸ்ருதிஹாசனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 14ம் தேதியன்று திரைக்கு வருவதை முன்னிட்டு ஸ்ருதிஹாசன் பரபரப்பாக பேட்டியளித்து வருகிறார்.
தற்போது ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டியில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'டிரெயின்' படத்தில் நடித்த அனுபவம் குறித்து கூறியதாவது, "முதலில் 'டிரெயின்' படத்தில் ஒரு பாடல் பாடுவதற்காக என்னை மிஷ்கின் அழைத்திருந்தார். அங்கு சென்ற போது 'கெஸ்ட் ரோல் ஒன்று இருக்கு. நீங்க நடிக்குறீங்களா?' என கேட்டார். அவரின் இயக்கத்தில் நடித்தது தனித்துவமான ஒரு அனுபவம். மிக்க தனித்திறமை கொண்டவர் என்பது எல்லோருக்கும் தெரிஞ்சதுதான். ஆங்கிலம், ஜப்பானிய மொழி படங்கள் குறித்து நிறைய விஷயங்கள் பேசுவார். என்னை எப்பவும் அன்பாக 'பாப்பா' என்று தான் அழைப்பார்" என தெரிவித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.