பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள கூலி படத்தின் மூலம் முதன் முதலாக ரஜினியுடன் இணைந்து நடித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். இந்த படத்தில் பிரீத்தி என்ற கதாபாத்திரத்தில் சத்யராஜ் மகளாக அவர் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் பெண் கதாபாத்திரங்களை கொலை செய்யப்படுவது போன்று காண்பித்து வருவதால் இப்படத்தில் ஸ்ருதியின் கதாபாத்திரத்தையும் கொன்று விடுவார் என்று ஆரம்பத்திலிருந்தே சோசியல் மீடியாவில் கருத்துக்கள் வெளியாகி வந்தன.
அதுகுறித்து ஸ்ருதிஹாசன் அளித்துள்ள பேட்டியில், ‛‛கூலி படத்தில் நான் கமிட்டானதுமே என்னுடைய கதாபாத்திரம் கொலை செய்யப்பட்டுவிடும் என்று ரசிகர்கள் கருத்து வெளியிட தொடங்கி விட்டார்கள். அதோடு இவர் சண்டைக் காட்சிகளில் நடிப்பாரா என்றும் கேட்டார்கள். ஆனால் இந்த படத்தில் நான் சண்டைக் காட்சியில் நடிக்கவில்லை. சத்யராஜ் மகளாக பிரீத்தி என்ற வேடத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தின் கதையை கேட்டதுமே பல பெண்களின் கதாபாத்திரங்களோடு தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது. அந்த வகையில் டெஸ்ட்டோஸ்டிரான் நிறைந்த கூலி படத்தில் நான் ஒரு ஹெல்த்தியான ஈஸ்ட்ரோஜனாக இருப்பேன்'' என்று தெரிவித்து இருக்கிறார்.