பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
வார இறுதியில் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி மக்களை குஷிப்படுத்திய நிலையில், திரையரங்கிற்குச் செல்ல முடியாதவர்களையும் குஷிப்படுத்தும் விதமாக ஓடிடி தளங்கள் அமைந்துள்ளன. அந்த வரிசையில் பிரபல ஓடிடி தளங்களான ஹாட் ஸ்டார், அமேசான் பிரைம், ஜீ5, ஆஹா, சோனி லைவ், லயன்கேட்ஸ் பிளே உள்ளிட்டவற்றில் இந்த வாரம் வெளியாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களை என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
மாமன்
சமீபத்தில் குடும்ப உறவை மையப்படுத்தி வெளிவந்த வெற்றி பெற்ற திரைப்படம் 'மாமன்'. நடிகர் சூரி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். இந்த படத்தில் சூரியின் நடிப்பு அனைவரையும் கவர்ந்து இருந்தது. விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் நாளை(ஆக.8ம் தேதி) ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
பறந்து போ
இயக்குநர் ராமின் படைப்பில், நடிகர் சிவா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த திரைப்படம் 'பறந்து போ'. விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் குழந்தைகளையும், தாய்மார்களையும் வெகுவாக கவர்ந்தது. நேற்றுமுன்தினம் ஆக.5ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
டிரெண்டிங்
நடிகர் கலையரசன், பிரியாலயா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'டிரெண்டிங்'. இயக்குநர் சிவராஜ் இயக்கி இருந்தார். முக்கிய பிரச்னையைப் பேசிய இந்த திரைப்படம் நாளை(ஆக.8ம்தேதி) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ஓஹோ எந்த பேபி
நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‛ஓஹோ எந்தன் பேபி'. கடந்த மாதம் ஜூலை மாதம் 11ம் தேதி திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
பத்மஷலு(Badmashulu)
தெலுங்கு ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக வெளிவந்த திரைப்படம் 'Badmashulu'. இரண்டு நண்பர்களால் ஊர்படும் பாட்டை சொல்லும் கமெடிப் படமான இது, இன்று(ஆக.7ம் தேதி) ஈடிவி விண் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
மாயாசபா
80ம் காலகட்டத்தில் அரசியல் எப்படி இருந்தது என்பதை மையமாக வைத்து எடுக்கப்படத் தெலுங்கு வெப் தொடர் மாயாசபா, 'Mayasabha'. இந்த வெப்தொடர் இன்று சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
அரேபியக் காதலி
கயல் ஆனந்தி நடிப்பில் வெளியான திரைப்படம் 'அரேபியக் காதலி'. மீனவர்களின் வாழ்க்கையைச் சொல்லும் விதமாகக் கதைக் களம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் நாளை(ஆக.8ம் தேதி) அமோசன் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ஹெப்புலி கட் (Hebbuli Cut)
கன்னட மொழியில் உருவான திரைப்படம் ஹெப்புலி கட், 'Hebbuli Cut'. இந்த படம் நாளை(ஆக.8ம் தேதி) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
மொத்தேவரி லவ் ஸ்டோரி (Mothevari Love Story)
ரொமான்டிக் லவ் ஸ்டோரியாக தெலுங்கில் உருவான திரைப்படம் மொத்தேவரி லவ் ஸ்டோரி, 'Mothevari Love Story'. இந்த படம் நாளை(ஆக.8ம் தேதி) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.