விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். | தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் |
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணி 'மாஸ்டர், லியோ' ஆகிய படங்களில் இணைந்தது. இரண்டுமே வசூல் ரீதியாக வெற்றிப் படங்கள்தான். இருந்தாலும் விமர்சன ரீதியாக 'மாஸ்டர்' படத்தை விடவும், 'லியோ' படத்திற்கு வரவேற்பு குறைவாகவே இருந்தது. அதிலும் குறிப்பாக படத்தில் இடம் பெற்ற பிளாஷ்பேக் காட்சிகளுக்கு நெகட்டிவ்வான விமர்சனங்கள்தான் அதிகம் வந்தது.
அது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் லோகேஷ். “விஜய் படம் என்றாலே ஒரு 'இன்ட்ரோ சாங்' கண்டிப்பாக இருக்கும். ஆனால், 'லியோ' படத்தில் அப்படி எதுவும் வைக்க முடியவில்லை. அப்படியான ஒரு பாடல் வேண்டும் என்று தயாரிப்பு தரப்பிலும் மார்க்கெட்டிங் தரப்பிலும் கேட்டார்கள். அதனால், இரண்டாவது பாதியில் பிளாஷ்பேக்கை ஒரு பாடலுடன் ஆரம்பித்திருப்பேன்.
பிளாஷ்பேக் 30 நிமிடங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், அப்படி வைத்தால் படத்தின் நீளம் அதிகமாக வந்துவிடும் என்பதால் அதை 18 நிமிடங்களாகக் குறைத்தேன். அதனால்தான் அதற்குக் கலவையான விமர்சனங்கள் வந்தது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிளாஷ்பேக்கில் இடம் பெற்ற 'நான் வரவா' பாடலும் புகை பிடிப்பது, மது அருந்துவது பற்றிய வரிகளாக இருந்ததால் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதுவும் படத்தின் நெகட்டிவ் விமர்சனத்திற்கு ஒரு காரணமாக இருந்தது.