இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
கோபி இயக்கத்தில் அறிமுக நடிகர் தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ''யாதும் அறியான்'' படக்குழுவிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து பல தடைகளை தாண்டி சாதித்து காட்டியவர் சிவகார்த்திகேயன். இன்று தனக்கென ஒரு அடையாளத்துடன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் சிவகார்த்திகேயன், சினிமாவில் புதிய முயற்சியோடு வித்தியாசமான கதைக்களத்துடன் வருபவர்களை பாராட்ட தவறியதில்லை.
அந்த வகையில் பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ''யாதும் அறியான்'' படக்குழுவை அழைத்து பாராட்டியுள்ளார். இந்தப்படத்தை கோபி இயக்க, லீட் ரோலில் அறிமுக நடிகர் தினேஷ் நடித்துள்ளார். அவருடன் அப்புகுட்டி, தம்பி ராமையா, கே.பி.ஓய் ஆனந்த பாண்டி, ப்ரணா, சியாமள் ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்திற்கு எல்டி ஒளிப்பதிவு செய்ய, தர்மபிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இதன் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற நிலையில், இதில் இடம் பெற்றுள்ள முதல் பாடலான மலரே.... தினமே... என்ற பாடல் சரிகம தமிழ் யுடியூப் சேனலில் வெளியாகி, ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தது. இந்த பாடலை எஸ்.கே.சித்திக் எழுத, சூப்பர் சிங்கர் பிரபலம் அருள்பிரகாசம் பாடியுள்ளார்.
இந்த நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனை, ஹீரோ தினேஷ், இயக்குனர் கோபி, ஒளிப்பதிவாளர் எல்டி, பாடலாசிரியர் சித்திக் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். டிரைலரை பார்த்த சிவகார்த்திகேயன், ''இதை பார்க்கும் போது திரில்லர் படம் என்பதும், ஏதோ ஒரு விஷயம் படத்தில் இருக்கு என்பதும் நன்றாக தெரிகிறது. வருஷத்தை மாற்றி மாற்றி காட்டுவதை பார்த்தால் புதுசா ஏதோ இருக்கிறது என்று தெரிகிறது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்றார்.
யாதும் அறியான் படம் இம்மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.