தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்தத் தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' |

விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட் நடித்துள்ள 'லவ் மேரேஜ்' படம் கடந்த வாரம் வெளியானது. சண்முக பிரியன் இயக்கினார். அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது, சக்தி பிலிம் பேக்டரி வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடந்தது. இந்த படத்தில் சுஷ்மிதா பட், விக்ரம் பிரபுவுடன் திருமணம் நிச்சயமாகி இருந்த நிலையில் அவர் காதலனுடன் ஓடிப்போகும் கேரக்டரில் நடித்திருந்தார். இப்படியான ஒரு கேரக்டரில் எந்த நடிகையும் துணிச்சலுடன் நடித்திருக்க மாட்டார்கள். என்று விக்ரம் பிரபு பாராட்டி இருந்தார்.
இதுகுறித்து பேசிய சுஷ்மிதா பட், "நான் நடித்திருந்த அம்பிகா கதாபாத்திரத்திற்கு எப்படி வரவேற்பு அளிப்பார்கள்? என்று பதற்றத்துடன் இருந்தேன். இந்த கேரக்டரை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்களோ, என்னை திட்டுவார்களோ என்று பயந்தேன். ஆனால் இந்த கதாபாத்திரத்தை இயக்குநர் நேர்த்தியாக வடிவமைத்திருந்தார். எனது கேரக்டர் தரப்பு நியாயத்தையும் அழகாக சொல்லியிருந்தான். அதனால் அதற்கான வரவேற்பும் நான் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருந்தது. இதற்காகவும், என் மீது நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்காகவும் இந்த தருணத்தில் இயக்குநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
படம் வெளியான பிறகு நிறைய திரையரங்குகளுக்கு நேரில் சென்றபோது ரசிகர்களின் வரவேற்பு எங்களை சந்தோஷப்படுத்தியது. படம் பார்த்த ரசிகர்கள் அனைவரும் நீண்ட நாட்கள் கழித்து ஒரு குடும்பத்தினருடன் அனைவரும் சந்தோஷமாக பொழுதைக் கழித்தோம் என்று உற்சாகத்துடன் சொன்னார்கள். அத்துடன் நீங்கள் காட்டியது போல் எங்களுடைய குடும்பத்திலும் சில உறவினர்கள் இருக்கிறார்கள் என்று உரிமையுடன் குறிப்பிட்டார்கள்.
இந்தப் படத்தில் எனக்கு தங்கையாக நடித்திருந்த நடிகை மீனாட்சி தினேஷ் அற்புதமாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் ராம் கதாபாத்திரத்தில் நடித்திருந்த விக்ரம் பிரபுவிற்கு ஏராளமான பெண் ரசிகைகள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்" என்றார்.




