லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
எஸ்.ஹரி உத்ரா புரொடக்ஷன்ஸ், டார்க் ஆர்ட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஹரி கே.சுதன் எழுதி இயக்கி தயாரித்துள்ள படம் 'மரியா'. 'ரங்கோலி' சாய் பிரபாகரன், பாவெல் நவகீதன், சித்து குமரேசன், விக்னேஷ் ரவி நடித்துள்ளனர். ஜி.மணிசங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். அரவிந்த் கோபாலகிருஷ்ணன், பரத் சுதர்சன் இசை அமைத்துள்ளனர்.
படம் குறித்து இயக்குனர் ஹரி கே.சுதன் கூறும்போது, "ஒரு பெண்ணுக்கு திடீரென்று வேறொரு விஷயத்தின் மீது அதிக ஆர்வம் ஏற்படுகிறது. பணியின் காரணமாக கட்டுப்பாட்டில் வைத்திருந்த உணர்வு மனதை சிதைக்கிறது. இதையடுத்து அப்பெண்ணை சமூகம் தூற்றுகிறது. அவரது எண்ணத்தை புரிந்துகொள்ள மறுக்கிறது. அப்பெண்ணுக்கான தனிப்பட்ட உணர்வுகளை உறவினர்கள் மட்டுமின்றி, பெற்ற தாயும் ஏற்க மறுக்கிறார். இதைச் சுற்றி நடக்கும் கதையிது. பல்வேறு சர்வதேச பட விழாக்களில் விருது பெற்ற இந்த படம் வரும் ஆகஸ்ட்டில் திரைக்கு வருகிறது" என்றார்.
இந்தப் படம் இரு பெண்களுக்கு இடையிலான லெஸ்பியன் உறவை சொல்லும் படம் என படக்குழு வெளிப்படையாக அறிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.