மீண்டும் விஷால், அஞ்சலி கூட்டணி | சிம்பு கையால் பட பெட்டிகளில் ரூ 500 : டி.ஆர் சொன்ன புது தகவல் | கமல்ஹாசன் தயாரிப்பில் பிரபுதேவா | 500 கோடி அறிவிப்பு, அப்புறம் பார்ட்டி, சொகுசு கார் உண்டா... | மீண்டும் கிசுகிசு : அர்ஜூன் தாஸ், ஐஸ்வர்ய லட்சுமி காதலா? | தெலுங்கு சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது… | ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் |
ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்து கடந்த 2019ம் ஆண்டு வெளியான படம் வார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த வருடத்திலிருந்து வார் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் ஹிருத்திக் ரோஷனுக்கு வில்லனாக தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார்.
யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 14ம் தேதியன்று படம் திரைக்கு வருகிறது. தற்போது இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து நடனமாடி உள்ளனர். இருவருமே நன்றாக ஆடக் கூடியவர்கள் என்பதால் போட்டி போட்டு நடனமாடி உள்ளனர்.