டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழ், தெலுங்கில் ஒரே ஆண்டில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த வருடம் இரண்டு மொழிகளிலும் 9வது சீசன் நடக்க வேண்டும். தமிழில் 7 சீசன்களாக நடிகர் கமல்ஹாசன், கடந்த வருடம் ஒளிபரப்பான 8வது சீசனை நடிகர் விஜய் சேதுபதியும் தொகுத்து வழங்கினார்கள்.
தெலுங்கில் முதல் சீசனை நடிகர் ஜுனியர் என்டிஆர், இரண்டாவது சீசனை நடிகர் நானி, அடுத்து ஒளிபரப்பான ஆறு சீசன்களையும் நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார். கடந்த ஆண்டு ஒளிபரப்பான 8வது சீசனுடன் அவர் விலக உள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த ஆண்டு ஒளிபரப்பாக உள்ள 9வது சீசனை வேறு ஒரு நடிகர் தொகுத்து வழங்குவார் என்றும் சொன்னார்கள்.
ஆனால், நாகார்ஜுனா இந்த 9வது சீசனையும் தொகுத்து வழங்க சம்மதம் சொல்லிவிட்டாராம். அதற்கான வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம். விரைவில் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு முன்னோட்ட வீடியோவுடன் வெளியாகும் என்கிறார்கள்.
தமிழில் 9வது சீசனை யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. கமல்ஹாசன் அளவிற்கு விஜய் சேதுபதி ரசிகர்களைக் கவரவில்லை என்பதுதான் பலரது விமர்சனமாக இருந்தது. விலகிய கமல் மீண்டும் வருவாரா, அல்லது விஜய் சேதுபதியே தொடர்வாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.




