டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட கதையம்சம் கொண்ட படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றால் தொடர்ந்து அதே போன்ற படங்கள் வெளிவரும். காதல், காமெடி, பேய்ப் படங்கள் என கொஞ்ச நாளைக்கு அப்படியான டிரென்டுகள் இதற்கு முன்பு வந்ததையும் பார்த்துள்ளோம். இப்போது 'பேமிலி' டிரென்டுக்கு தமிழ் சினிமா மாறிவிட்டதோ என்று சொல்லுமளவிற்கு அடுத்தடுத்து அப்படியான படங்கள் வர ஆரம்பித்துள்ளன.
இந்த ஆண்டில் வெளிவந்து வெற்றி பெற்ற படங்களில் மினிமம் பட்ஜெட் படங்களான 'குடும்பஸ்தன், டூரிஸ்ட் பேமிலி, மாமன்' ஆகிய படங்கள் பேமிலி கதையம்சம் கொண்ட படங்கள்தான். அந்த வரிசையில் இன்று டிரைலர் வெளியாகி, அடுத்த வாரம் ஜுலை 4ம் தேதி வெளியாக உள்ள '3 பிஎச்கே' படமும் இடம் பெறுமோ என்ற பாராட்டு அந்தப் படத்தின் டிரைலரைப் பார்த்த சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இப்படியான கதையம்சம் கொண்ட பேமிலி படங்கள் வெற்றி பெற்றால்தான் ஹீரோக்களின் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமா சிறிய நடிகர்கள் பக்கமும், சிறிய பட்ஜெட் படங்கள் பக்கமும் திரும்பும்.




