படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் |
போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டது, கோலிவுட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மலையாளம், தெலுங்கு, ஹிந்தி பட உலகில் கேள்விப்பட்ட விஷயங்கள் தமிழில் நடப்பது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சில ஆண்டுகளாக தமிழ் சினிமா வட்டாரங்களில் பார்ட்டி அதிகமாகிவிட்டது. அதில் சரக்கு தவிர, அதிக போதையை ஏற்படுத்த சில விஷயங்கள் உள்ளே வந்தன. சிலர் அதை வியாபாரமாக்கி, பணம் பார்த்தார்கள். அதன்விளைவுதான் போதை நடமாட்டம் வழக்கு. இப்படி பல பார்ட்டிகள் நடந்து வருகின்றன.
ஸ்ரீகாந்த் மட்டுமே சிக்கி இருக்கிறார். விசாரணை தீவிரப்படுத்தப்பட்டால் நேர்மையாக நடந்தால் இன்னும் பலர் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. மலையாள படப்பிடிப்பில் நடிகர்கள் போதை பயன்படுத்தக் கூடாது என்று அங்குள்ள சங்கங்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. அதேப்போல் தமிழ் சினிமாவிலும் கட்டுப்பாடுகள் வரும் என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட பார்ட்டிகளுக்கு சில நடிகர், நடிகைகள் ரெகுலராக செல்வது உண்டாம். அவர்களை, போலீசார் தீவிரமாக கண்காணிக்கிறார்கள். அதனால், சில வாரங்கள் கோலிவுட்டில் பார்ட்டி, கொண்டாட்டங்கள் இருக்காது என்று கூறப்படுகிறது.