விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். | தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் |
நடிகர் விஜயின் 51வது பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்ட 'ஜனநாயகன்' சிறப்பு போஸ்டரில் அடுத்த ஆண்டு ஜனவரி 9ல் படம் ரிலீஸ் என அறிவித்துவிட்டார்கள். அந்த போஸ்டரில் போலீஸ் உடையில் இருக்கிறார் விஜய். அவ்வளவுதான், சில விவாதங்கள் தொடங்கிவிட்டது. ஏற்கனவே இந்த படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் என்று செய்திகள் வந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் பர்ஸ்ட் லுக், முதல் பார்வை பார்த்தவர்கள் 'அந்த படத்திலும் ஹீரோ ஒரு காட்சியில் போலீஸ் ஆக வருவார். இதிலும் அப்படியே. அந்த படத்திலும் ஹீரோ கையில் டாட்டூ இருக்கும். இதிலும் அப்படியே என திரைக்கதை எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆனால், இன்றுவரை ரீமேக் என்பது குறித்து எந்த தகவலையும் படக்குழு சொல்லவில்லை. ஏற்கனவே, இந்தியில் வெற்றி பெற்ற பிங்க படத்தைதான், அஜித்தை வைத்து நேர் கொண்ட பார்வை என்ற பெயரில் இயக்கினார் எச்.வினோத். அந்த படம் ஹிட்டாகவில்லை. மீண்டும் ரீமேக் படம் இயக்குவரா? அதுவும் விஜயின் கடைசி படம் பாலகிருஷ்ணா படத்தின் ரீமேக் என்பது நம்ப முடியவில்லை என்று இன்னொரு தரப்பும் சொல்கிறது.